வங்கியில் 710 காலிப் பணியிடங்கள் – வயது வரம்பு, கல்வித்தகுதி, விண்ணப்ப கட்டண விவரங்கள் உள்ளே!!

0
வங்கியில் 710 காலிப் பணியிடங்கள் - வயது வரம்பு, கல்வித்தகுதி, விண்ணப்ப கட்டண விவரங்கள் உள்ளே!!
வங்கியில் 710 காலிப் பணியிடங்கள் - வயது வரம்பு, கல்வித்தகுதி, விண்ணப்ப கட்டண விவரங்கள் உள்ளே!!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS), 710 காலி பணியிடங்களுடன் கூடிய சிறப்பு அதிகாரி (SO) பதவிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான, கட்டணம், தகுதி குறித்து இந்த பதிவில் காணலாம்.

காலி பணியிடம் அறிவிப்பு:

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளில் ஏற்படும் காலி பணியிடங்களை நிரப்ப, வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS), ஆன்லைன் வாயிலாக தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில், வங்கிகளில் 710 சிறப்பு அதிகாரி பதவிக்கான காலிப்பணியிட அறிவிப்புகளை IBPS இன்று வெளியிட்டுள்ளது. வேளாண் கள அலுவலர், ராஜ் பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி உள்ளிட்ட காலியிடங்கள் இதில் அடங்கும்.

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க, நவம்பர் 11 வரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கான முதல் நிலை தேர்வுகள் டிசம்பர் மாதம் நடக்கும் என்றும், இதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி மாதம் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க, கல்வி தகுதி ஒவ்வொரு பதவி வாரியாக வேறுபடுகிறது. குறிப்பாகச் சொல்லப்போனால் அந்தந்த பிரிவுகளில், தேர்வர்கள் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்கத்தின் புதிய இயக்குனர் நியமனம் – கல்வித்துறை அதிரடி சுற்றறிக்கை!!

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 20 முதல் 30 ஆண்டுகள் என்பது கவனிக்கத்தக்கது. தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாகவும் முதல் நிலை, முதன்மை, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு என பல பிரிவுகளாகவும் நடத்தப்படும். SC/ST/PWBD உள்ளிட்ட தேர்வர்கள் ரூபாய் 175 ம், மற்ற பிரிவினர் ரூபாய் 850 கட்டணம் செலுத்த வேண்டும்.

இதனை ஆன்லைன் வாயிலாக, இன்று முதல் வரும் நவம்பர் 21 வரை செலுத்தலாம். சிறப்பு அதிகாரி பதவிக்கான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள https://www.ibps.in/ என்ற வங்கி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here