நிவாரண நிதி வழங்காமல் இழுத்தடிப்பு: மாவட்ட ஆட்சியர்கள் 5 பேருக்கு சிறை – கர்நாடக நீதிமன்றம் அதிரடி!!

0

கடந்த ஆறு ஆண்டுகளாக பெண்ணுக்கு உரிய நிவாரண நிதியை வழங்காத ஐந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறைத்தண்டனையும், அபராதமும் விதித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறைத்தண்டனை விதிப்பு:

நமக்கு அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒய் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் முதல்வர்  ஜெகன் மோகன் ரெட்டியின்  ஆட்சி நடந்து வருகிறது.  இந்த மாநிலத்தில் நெல்லூர் என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய் பிரம்மா.  அவரின் சொந்த ஊரான டாலாபாகா என்ற கிராமத்தில் உள்ள அவரது  நிலத்தை ஆந்திர மாநில அரசு கடந்த 2015-ம் ஆண்டு விரிவாக்க பணிகளுக்காக கையகப்படுத்தியது.

ஆனால், அதற்கு உரிய இழப்பீடு அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படவில்லை. அதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட உயர் நீதிமன்றத்தில் சாய் பிரம்மா வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக நீதிமன்றம்  இந்த பொண்ணுக்கு  நிலத்தின் உரிய இழப்பீடு 3 மாத காலத்தில் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனை அடுத்தும் இந்த பெண்ணக்கு இழப்பீடு தொகை வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்தது.  இந்த நிலையில் இந்த பெண் மீண்டும் இந்த  ஆண்டு மார்ச் மாதம் வரை உரிய நிவாரண நிதி வழங்கப்படவில்லை என்று கூறி  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதாவது, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் காலம் தாழ்த்தியதோடு மட்டுமில்லாமல், நீதிமன்றத்தின் தீர்ப்பையும் புறக்கணித்த நெல்லூர் மாவட்டத்தில் இதுவரை பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களான முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மன் மோகன் சிங்என்பவருக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும் மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

இவரோடு சேர்த்து தற்போது பிற மாவட்டத்தில் பணி செய்து வரும் எஸ்.எஸ். ராவத் ஐஏஎஸ் அதிகாரிக்கு 2 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும், சேஷகிரி ராவ், முத்தியால ராஜு, இந்தியாஸ் ஆகிய மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வாரம் சிறை தண்டனையும் அதனுடன் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்படுவதாக தமது நீதிகுறிப்பில் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here