உங்க மேனேஜர் பாக்குற வரை ஷேர் பண்ணுங்க.., அதிக நேரம் வேலை பார்ப்பதை தவிர்க்க புதிய வழிமுறை!!

0

தற்போதைய காலகட்டத்தில் ஊழியர்கள் அதிக நேரம் வேலை செய்கின்றனர். இதனால் அவர்களின், உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதை தவிர்க்கும் விதமாக சாம்சங் நிறுவனம் புதுவிதமான மவுஸ் ஒன்றை வடிவமைத்து உள்ளது.

நியூ மவுஸ்:

கொரோனா காரணமாக போடப்பட்ட பொதுமுடக்கத்தால் அலுவலகத்திற்கு போகாமல் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் நிலை உருவாகி உள்ளது. இதனால் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நேரத்தை குறைத்து அதிக நேரம் வேலை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், “பேலன்ஸ் மவுஸ்;’ என்ற ஒன்றை தற்போது தயாரித்துள்ளது.

HyperFocal: 0

அதாவது திட்டமிடப்பட்ட அலுவலக நேரத்திற்கு பிறகு வேலை செய்வதை தவிர்க்கும் விதமாக இந்த மவுஸ் உருவாக்கப்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த கிரியேட்டிவ் மவுஸ் அலுவலக நேரத்திற்கு மேல் வேலை செய்தால் நம்முடைய கை அசைவை வைத்து, அந்த நேரத்தில் வேலை செய்யாமலும், பணியாளர்களின் கைகளை விட்டு நகர்ந்துக் கொண்டே இருக்கும் படி வடிவமைத்துள்ளனர்.

8 மணி நேரம் தான் வேலை என்று சொல்லும் பல நிறுவனங்களில் 8 மணி நேரத்தில் வேலை முடிவதில்லை. டெட் லைன் நோக்கி ஓடும் நேரத்தில் வேலை 10 -12 மணி நேரம் என்று ஆகிறது. இந்த வேலை நேர அதிகரிப்பால் பணியாளர்களின் சாதாரண வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here