தேசிய அணியில் இடம் பிடிப்பேன்.., அதுதான் என்னோட லட்சியமே.., இந்திய வீராங்கனை ஓபன் டாக்!!

0

இந்திய அணி சார்பில், தேசிய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பிடிப்பேன் என்று இந்திய வீராங்கனை கூறியுள்ளார்.

மும்தாஜ் பேட்டி

2021-22 ஆம் ஆண்டுக்கான FIH ஹாக்கி ஸ்டார் விருதுகளுக்கான பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய வீராங்கனை மும்தாஜ் கான் பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த விருதை அடைவதற்கு அவர் பல போட்டிகளில் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். அதன்படி 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற FIH ஜூனியர் உலகக் கோப்பையில் கூட 8 கோல் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார்.

இவரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் அவர் பெயர் விருது பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பேசிய மும்தாஜ், “எப்ஐஎச் ரைசிங் ஸ்டார் ஆஃப் தி இயர் என்ற விருதுக்கு எனது பெயர் இடம்பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகளில் மட்டுமின்றி, இந்தியாவுக்காக தேசிய அணியில் விளையாடுவதே எனது கனவு என கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து நாட்டுக்காக விளையாடி அதிக பதக்கம் வெல்ல வேண்டும் என மும்தாஜ் தெரிவித்துள்ளார். இவர் அண்மையில் நடைபெற்ற காமென் வெல்த் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெளிப்பதக்கம் வெல்வதற்கு ஒரு முக்கிய பங்காக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here