ஹைலோ ஓபன் பேட்மிண்டன் 2022: சீன வீரரை வீழ்த்திய கிடாம்பி ஸ்ரீகாந்த்…, தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும் இந்திய வீரர்கள்!!

0
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் 2022: சீன வீரரை வீழ்த்திய கிடாம்பி ஸ்ரீகாந்த்..., தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும் இந்திய வீரர்கள்!!
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் 2022: சீன வீரரை வீழ்த்திய கிடாம்பி ஸ்ரீகாந்த்..., தொடர்ந்து வெற்றிகளை குவிக்கும் இந்திய வீரர்கள்!!

ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீரர்கள், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் தொடர்ந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

ஹைலோ ஓபன் பேட்மிண்டன்:

ஜெர்மனியில் ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்திய சார்பாக கிடாம்பி ஸ்ரீகாந்த், சாய்னா நேவால், ட்ரீசா ஜாலி, சங்கர் பிரசாத் உள்ளிட்ட பல வீரர்கள் பங்கு பெற்று விளையாடி வருகின்றன. இதில், பெண்களுக்கான இரட்டையர் பிரிவில், ஜெர்மனியின் லிண்டா எப்லர் மற்றும் இசபெல் லோஹாவ் ஜோடியை எதிர்த்து, இந்தியாவின் ட்ரீசா ஜாலி மற்றும் காயத்ரி கோபிசந்த் போட்டியிட்டனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில், இந்திய ஜோடி 21-18 மற்றும் 21-15 என தொடர்ந்து இரண்டு செட்களை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இதே போன்று ஆடவருக்கான இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சங்கர் பிரசாந்த் மற்றும் ரவிகிருஷ்ணா ஜோடி சக இந்திய வீரர்களான விஷ்ணுவர்தன் பஞ்சாலா மற்றும் கிருஷ்ணா கரகாவை எதிர்த்து விளையாடினர்.

புரோ கபடி 2022: பெங்கால் வாரியர்ஸுக்கு எதிராக சமன் செய்த தமிழ் தலைவாஸ்…, நரேந்தரின் அசத்தல் வேட்டை!!

இதில், விஷ்ணுவர்தன் பஞ்சாலா மற்றும் கிருஷ்ணா கரகா ஜோடி, 22-24 என முதல் செட்டை இழந்த நிலையில், 21-12, 21-17 என அடுத்த இரு செட்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளனர். ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் 15-21, 21-14 மற்றும் 21-13 என்ற செட் கணக்கில் சீனாவின் லு குவாங் ஸுவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here