“ஹைதராபாதி சிக்கன் தம் பிரியாணி” ரெசிபி – நாவூறும் மணம், நினைவில் நிற்கும் சுவை!!!

0

பிரியாணில பல வகை இருக்கு. அதுல ரொம்ப ஸ்பெஷல் ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி. கொஞ்சம் அதிகமான டைம் எடுத்தாலும் அதோட சுவையை நீங்க ருசிக்கும் போது டைம்லாம் நியாபகத்துக்கே வராதுங்க. சுவையான, சூப்பரான “ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி”யை உங்க வீட்ல ஸ்பெஷலான நாள்கள்ல செஞ்சு அந்த நாள இன்னும் ஸ்பெஷல் ஆகுங்க. எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

எண்ணெய் – 1.5 கப்
பெ.வெங்காயம் – 2
ரோஸ் எசன்ஸ் – 1 டீ ஸ்பூன்
மல்லித்தழை – 1/4 கப்
புதினா – 1/4 கப்
நெய் -2 டேபிள் ஸ்பூன்
குங்குமப்பூ – 1 பின்ச்
பால் – 3 டேபிள் ஸ்பூன்
கோதுமை மாவு – தேவையான அளவு

சிக்கன் ஊற வைப்பதற்கு தேவையான பொருட்கள்:

சிக்கன் – 1 kg
தயிர் -1/2 கப்
மிளகாய்த்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு விழுது – 4 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை – 4 டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை – 1/2 கப்
புதினா – 1/2 கப்
கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2

அரிசியை சமைப்பதற்கு தேவையான பொருட்கள்:

பாசுமதி அரிசி – 1 kg
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
பட்டை – 2 துண்டு
ஏலக்காய் – 6
கிராம்பு – 6
பிரியாணி இல்லை – 2
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வெங்கயாத்தை பொன்னிறம் ஆகும் வரை வறுக்க வேண்டும். இதில் பாதி வெங்காயத்தை கடைசியில் சேர்ப்பதற்க்காக தனியே வைக்க வேண்டும். இப்பொழுது வேறு ஒரு பாத்திரத்தில் சிக்கன் மற்றும் சிக்கன் ஊற வைப்பத்தற்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்க்க வேண்டும். அதில் வருத்து வைத்திருக்கும் பாதி வெங்காயம் மற்றும் வெங்காயம் வறுத்த எண்ணெய் இவற்றை சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஒரு சிறிய பௌலில் குங்குமப்பூ வை பாலில் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்பொழுது பாசுமதி அரிசியை நன்கு கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி, தண்ணீர், உப்பு, முழு மசாலாக்கள் இவற்றை சேர்த்து வேக வைக்க வேண்டும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் வடித்து தனியே வைத்துக்கொள்ள வேண்டும்.

10 நிமிஷத்துல “இன்ஸ்டன்ட் ஓட்ஸ் உப்புமா” ரெசிபி!!

இப்பொழுது ஒரு அடிகனமான பெரிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் முதலில் ஊற வைத்திருக்கும் சிக்கன் கறியை பரப்பி வைக்க வேண்டும். பின்னர் அதன் மேல் அரிசியை சேர்க்க வேண்டும். அதன் மேல் வறுத்து வைத்திருக்கும் வெங்காயம், கொத்தமல்லிதலை, புதினா, ரோஸ் எஸ்ஸன்ஸ், நெய், ஊற வைத்திருக்கும் குங்குமப்பூ இவற்றை சேர்க்க வேண்டும்.

இப்பொழுது கோதுமை மாவை பிசைந்து பாத்திரத்தின் மேல் விளிம்பில் வைத்து மூடி 40 முதல் 45 நிமிடங்கள் வரை சிம்மில் வைத்து வேக வைக்க வேண்டும். 15 நிமிடங்கள் களித்து மெதுவாக கலந்து விட வேண்டும். இப்பொழுது சுவையான “ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி” ரெடி. இந்த பிரியாணியை எண்ணெய் கத்தரிக்காயுடன் சேர்த்து பரிமாற வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here