மீண்டும் நடிகர் சித்தார்த் மீது வழக்குப்பதிவு – ஐதராபாத் சைபர் கிரைமில் பெண் ஒருவர் புகார்!!!

0

நடிகர் சித்தார்த் விளையாட்டு வீராங்கனை சாய்னா நேவாலை இழிவுபடுத்தும் விதமாக ட்வீட் செய்ததை தொடர்ந்து தற்போது ஜதராபாத் சைபர் கிரைமில் ஒரு பெண் சித்தார்த்தின் மீது புகார் அளித்து உள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு:

கடந்த ஜனவரி 5 ஆம் தேதியில் பிரதமர் மோடிக்கு பஞ்சாப் செல்லும் போது பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது. மோடியை நேரில் பார்க்க வேண்டும் என சிலர் கலவரத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட் செய்து இருந்தார்.இந்த ட்வீட்டுக்கு நடிகர் சித்தார்த் பதில் ட்வீட் போட்டு இருந்தார். அதில் நடிகர் சித்தார்த் இரட்டை அர்த்தத்தோடு பேசி உள்ளதாக கூறி அவரின் மீது மகாராஷ்டிரா மாநில டி.ஜி.பி.யிடம் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.

அதன் பிறகு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கேட்டு விட்டார். ஆனாலும் இந்த பிரச்சினை இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை.மீண்டும் அவர் மீது ஜதராபாத் சைபர் கிரைம் போலீசில் பெண் ஒருவர் புகார் கொடுத்து உள்ளார். இந்த புகாரின் பெயரில் நடிகர் சித்தார்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஐதராபாத் போலீசார் கூறியுள்ளனர்.


வாட்ஸ்
 அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here