இந்தியாவில் ஹைப்ரிட் முறைக்கு அதிக வரவேற்பு.,, ஊழியர்கள் ஏகோபித்த ஆதரவு.,முழு விவரம் இதோ!!

0
இந்தியாவில் ஹைப்ரிட் முறைக்கு அதிக வரவேற்பு.,, ஊழியர்கள் ஏகோபித்த ஆதரவு.,முழு விவரம் இதோ!!
இந்தியாவில் ஹைப்ரிட் முறைக்கு அதிக வரவேற்பு.,, ஊழியர்கள் ஏகோபித்த ஆதரவு.,முழு விவரம் இதோ!!

இன்றைய காலகட்டத்தில், நிறுவன ஊழியர்கள் மத்தியில் ஹைப்ரிட் வேலை முறை அதிக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஹைப்ரிட் முறை:

கொரோனா வருகைக்கு பின் “work from home” என்ற வார்த்தை மிகவும் வழக்கமானவையாக மாறிவிட்டது. இருப்பினும் கொரோனா தாக்கம் குறைந்து உள்ளதால், நிறுவனங்கள் மீண்டும் பணியாளர்களை அலுவலகத்திற்கு அழைத்தது. ஆனால் ஏராளமான ஊழியர்கள் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதையடுத்து ஹைப்ரிட் வேலை முறையை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியது. அதாவது ஹைப்ரிட் முறையில், ஊழியர்கள் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டும் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்ய வேண்டும். இந்நிலையில் ஹெச்பியின் உலகளாவிய ஆய்வின்படி, ஊழியர்கள் அதிகம் ஹைப்ரிட் வேலை முறையை ஆதரிப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் ஹைப்ரிட் முறைக்கு அதிக வரவேற்பு.,, ஊழியர்கள் ஏகோபித்த ஆதரவு.,முழு விவரம் இதோ!!

இந்த முறை ஊழியர்களின் உற்பத்தித் திறனை அதிகம் மேம்படுத்துவதாகவும் வேலை, குடும்பம் இரண்டிலும் ஊழியர்கள் சமமான கவனம் செலுத்த முடிவதாகவும் தெரிகிறது. கணக்கெடுப்பின்படி, 92% பேர் இதை ஒப்புக் கொண்டதாக தகவல்கள் கூறுகிறது. இதை தொடர்ந்து 88% பேர் ஹைப்ரிட் முறையை அதிகரிக்க சொல்வதாகவும், 72% பேர் ஹைப்ரிட் முறை அதிக உற்பத்தித் திறனை மேம்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். ஊழியர்களின் இந்த கருத்துக்களுக்கு நிறுவங்களின் பதில் என்ன என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here