கருகிய தோசையால் வாழ்க்கையே நாசம் – மனைவியுடன் சண்டை போட்ட கணவன் தற்கொலை!!

0
கருகிய தோசையால் வாழ்க்கையே நாசம் - மனைவியுடன் சண்டை போட்ட கணவன் தற்கொலை!!
கருகிய தோசையால் வாழ்க்கையே நாசம் - மனைவியுடன் சண்டை போட்ட கணவன் தற்கொலை!!

தோசை கருகியதால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவன் தற்கொலை:

கோவை மாவட்டத்தில் சிங்காநல்லூர் நாராயணசாமி நகரில் பழனி-மாதவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளது குறிப்பிடத் தகுந்தது. இந்த நிலையில், நேற்றிரவு மாதவி உணவு பரிமாறியபோது தோசை கருகி இருந்ததால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் அது தகராறாக மாறியுள்ளது. இதையடுத்து பழனி அறையின் உள்ளே சென்று கதவை தாழிட்டு கொண்டதாக கூறப்படுகிறது.

கருகிய தோசையால் வாழ்க்கையே நாசம் - மனைவியுடன் சண்டை போட்ட கணவன் தற்கொலை!!
கருகிய தோசையால் வாழ்க்கையே நாசம் – மனைவியுடன் சண்டை போட்ட கணவன் தற்கொலை!!

இதனை அடுத்து அதிர்ச்சியடைந்த மனைவி, கதவை திறந்து பார்த்தபோது அறையில் பிணமாக தொங்கிய கணவரின் பிரேதத்தை பார்த்து மாதவி பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து, தகவலறிந்து வந்த போலீசார் பழனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கருகிய தோசையால் வாழ்க்கையே நாசம் - மனைவியுடன் சண்டை போட்ட கணவன் தற்கொலை!!
கருகிய தோசையால் வாழ்க்கையே நாசம் – மனைவியுடன் சண்டை போட்ட கணவன் தற்கொலை!!

இந்த நிலையில், இதற்கு முன்பே கணவனுக்கும் மனைவிக்கும் இடையேயான குடும்ப தகராறில் பழனி நான்கு முறை தற்கொலைக்கு முயன்றது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மேலும் போலீசாரின் சார்பில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒரு தோசை தகராறில் கணவரின் உயிர் பறிபோனது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here