தனது மனைவிக்கு யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவன் – இறந்து பிறந்த குழந்தையால் சோகமான குடும்பம்!!

0

தனது சகோதரி உதவியுடன் சமூக வலைத்தளமான யூடியூப் வீடியோவை பார்த்து, மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவனின் அலட்சியத்தால் குழந்தை இறந்து பிறந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குழந்தை இறப்பு:

ராணிப்பேட்டை மாவட்டம் நெடும்புலி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி கோமதி.  நிறைமாத கர்ப்பிணியாக இவர் இருந்த நிலையில், கோமதிக்கு கடந்த 18ம் தேதி மாலை பிரசவ வலி வந்துள்ளது. இதை அறிந்த கணவர் தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், தனது சகோதரி கீதா உதவியுடன் சமூக வலைதளமான யூடியூப் வீடியோவை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

இவரின் அலட்சியத்தால் கோமதிக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. மேலும், அவருக்கு கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டு, மயங்கி சரிந்தார். இதனால், அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை இறப்பு காரணமாக, லோகநாதனிடம் நெமிலி காவல் துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here