
நேற்று ரோகிணி திரையரங்கம் ஊழியர்கள் நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காத விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பத்து தல:
ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர்கள் சிலம்பரசன், கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவான திரைப்படம் தான் பத்து தல. இந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று முதல் காட்சியை பார்ப்பதற்கு, சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்குக்கு நரிக்குறவர்கள் வந்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
ஆனால் அவர்களை உள்ளே அனுமதி மறுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து தியேட்டர் நிர்வாகம் விளக்கம் அளித்த போதிலும், சினிமா பிரபலங்கள் முதல் அரசியல்வாதி வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் அந்த இரண்டு ஊழியர்கள் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை.
வீடுதோறும் நாளுக்கு ஒரு குடிநீர் கேன் இலவசம்…, அரசின் புதிய அறிவிப்பு!!
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. அதற்காக பாதிக்கப்பட்ட 4 பேரை விசாரணைக்கு அழைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நரிக்குறவர்களுக்கு நடந்த இந்த அநீதியை தட்டி கேட்கும் விதமாக இன்று ரசிகர்கள் ரோகிணி தியேட்டர் போவதை தவிர்த்துள்ளதாக சொல்லப்படுகிறது.