பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்!!!

0

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு குறித்த முடிவு இன்னும் 2 நாட்களில் தெரியவரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு:

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை நடத்தலாமா? ரத்து செய்வதா? என்பது குறித்து முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் தொடங்கியது. கொரோனாவின் இரண்டாவது அலை பரவியதை அடுத்து 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை சிபிஎஸ்இ நிர்வாகம் ஒத்தி வைத்தது.

தற்போது இரண்டாவது அலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் வேகமாக பரவி வருகிறது. இந்திய அளவிலும் தொற்று அதிகமாக உள்ள நிலையில் கொரோனா வைரஸ் 2-வது அலை பரவியதையடுத்து 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது என்பது குறித்து சமீபத்தில் மாநில அரசுகளுடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில்  தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா ரத்து செய்யலாமா என்பது குறித்து இன்றைய தினம் பள்ளிக் கல்வித் துறை உயரதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிவில் பிளஸ்-2 தேர்வு குறித்து 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here