
ஆதார் கார்டில் உள்ள விவரங்களை சரி செய்வதற்கான வழிகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆதார் கார்டு:
ஆதார் கார்டு இப்போது அனைவருக்கும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மேலும் மத்திய, மாநில அரசின் சலுகைகளை பெற ஆதார் கார்டு முக்கிய அங்கமாக உள்ளது. சமீபத்தில் கூட பான் கார்டுகளை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை தொடர்ந்து அனைவரும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைத்தனர். இந்நிலையில் ஆதார் கார்டு குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் இருந்து mAadhaar செயலியை பதிவிறக்கம் செய்து அதில், ஆதார் கார்டில் உள்ள க்யூ.ஆர் கோர்டை ஸ்கேன் செய்ய வேண்டும்.
அப்படி செய்வதன் மூலம் பெயர், பாலினம், பிறந்த தேதி, முகவரி மற்றும் புகைப்படம், 12 இலக்க ஆதார் எண் மற்றும் கேப்ட்சா குறியீடு போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா என பார்த்து கொள்ளலாம். ஒரு வேளை அதில் ஏதேனும் தவறுகள் இருப்பின் UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று திருத்தி கொள்ளலாம்.