‘சைவ நெத்திலி குழம்பு’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0

வாழைப்பூவில் உள்ள நன்மைகள் ஏராளம். அதனை வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் சரியாகும். மேலும் இது ரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. ஆனால் இதன் துவர்ப்பு தன்மையால் பலரும் இதனை சாப்பிட விரும்புவதில்லை. இப்பொழுது வாழைப்பூவை வைத்து சுவையான ‘சைவ நெத்திலி குழம்பு’ எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • வாழைப்பூ – 1
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
  • மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1 தேக்கரண்டி
  • புளி
  • இஞ்சி – சிறிது
  • பச்சைமிளகாய் – 2

செய்முறை:

முதலில் வாழைப்பூவை பொடியாக நறுக்காமல் முழுவதுமாக வைக்க வேண்டும். இதனை நீரில் போட்டு கொதிக்க விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஒரு பௌலில் புளி கரைத்த தண்ணீரை எடுத்து அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

Saiva-Meen-Kuzhambu-
Saiva-Meen-Kuzhambu-

பிறகு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சோம்பு, பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் அதில் தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிது உப்பு சேர்த்து கொள்ளவும். உப்பு சேர்த்து கொள்வதால் தக்காளி நன்கு வதங்கும். பிறகு அதில் மசாலாக்கள் கலந்து வைத்த புளித்தண்ணீரை அதில் சேர்த்து கொதிக்க விடவும்.

'சைவ நெத்திலி குழம்பு'
‘சைவ நெத்திலி குழம்பு’

பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் நாம் வேகவைத்து எடுத்து வைத்துள்ள வாழைப்பூவை அதில் சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான சைவ நெத்திலி குழம்பு தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here