மண்மணக்கும் ‘மதுரை மட்டன் மசாலா’ ரெசிபி – கிராமத்து விருந்து!!

0
veg mutton
veg mutton

மட்டன் என்றாலே அசைவ பிரியர்களுக்கு தனி விருப்பம் என்றே சொல்லலாம். மட்டனில் தான் அதிக சத்துக்களும் நிறைந்து இருக்கும். சிலருக்கு அதன் சுவை பிடிக்காது. இப்பொழுது எல்லாருக்கும் பிடிக்கும் விதமாக மதுரை மட்டன் மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

mutton gravy ingredients
mutton gravy ingredients
  • மட்டன் – 1/2 கி
  • பெரிய வெங்காயம் – 3
  • இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • சீரகம் – 1 தேக்கரண்டி
  • மிளகு – 1 தேக்கரண்டி
  • பட்டை, கிராம்பு
  • பிரியாணி இலை – சிறிது
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
  • கரம் மசாலா – 1 தேக்கரண்டி
  • தயிர் – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை போட்டு மொறுமொறுப்பாக வதக்கவும். இப்பொழுது அதில் பாதியை தனியாக எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது குக்கரில் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, மிளகு போன்றவற்றை சேர்க்கவும்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

mutton-kulambu
mutton-kulambu

அது நன்கு வதங்கியதும் மட்டனை அதில் சேர்த்து கிளறவும். 5 நிமிடம் கழித்து அதில் உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும். இப்பொழுது நாம் தனியாக எடுத்து வைத்த வெங்காயத்துடன் சிறிது தயிர் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

mutton-kulambu
mutton-kulambu

அந்த அரைத்த விழுதை அந்த மட்டனில் சேர்த்து கிளறவும். இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி வைத்து 4 விசில் வந்தவுடன் இறக்கினால் சுவையான மதுரை மட்டன் மசாலா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here