மீதமான சப்பாத்தியை வைத்து சூப்பரான ‘சில்லி சப்பாத்தி’ ரெசிபி – இதோ உங்களுக்காக!!

0
chilli sapathi
chilli sapathi

நாம் சமைக்கும் உணவுகளில் நிறைய பொருட்கள் வீணாவது உண்டு. அதனை கீழே கொட்டாமல் புதிய விதமாக பயன்படுத்தலாம். ஆனால் பலர் அதை செய்வது கிடையாது. சாப்பாட்டை வீணாக்குவது சரியானது அல்ல. இப்பொழுது மீதமான சப்பாத்தியை வைத்து சூப்பரான ‘சில்லி சப்பாத்தி’ எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

chilli sapathi
chilli sapathi
  • சப்பாத்தி – 4
  • வெங்காயம் – 2
  • பச்சைமிளகாய் – 4
  • குடைமிளகாய் – 1
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • தக்காளி சாஸ்
  • இஞ்சி – சிறிது
  • பூண்டு – 5 பல்
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

சப்பாத்தி போடும்போது சிலர் அளவு தெரியாமல் மாவை அதிகமாக போட்டு விடுவர். இதனால் சப்பாத்தி வீணாகிறது. எனவே மீதமான சப்பாத்தியை கீழே கொட்டாமல் புது விதமாக நிறைய டிஷ் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

sapathi
sapathi

அதற்கு முதலில் சப்பாத்தியை சதுரமாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அந்த சப்பாத்தியை மிதமான சூட்டில் பொரித்து எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

chilli sapathi
chilli sapathi

அதன்பின் வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சதுரமாக வெட்டி இதில் சேர்த்து அடிபிடிக்காமல் வதக்கவும். இப்பொழுது உப்பு மற்றும் தக்காளி சாஸை அதில் சேர்த்து வதக்கவும். அதன்பின் சப்பாத்தியை அதில் சேர்த்து கிளறவும். இப்பொழுது சுவையான ‘சில்லி சப்பாத்தி’ தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here