சுவையான ‘பீட்ரூட் அல்வா’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
Healthy_Beetroot_Halwa
Healthy_Beetroot_Halwa

ஸ்னாக்ஸ் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் கடைகளில் அதிகம் வாங்கி தருவதை நிறுத்த வேண்டும். முடிந்த வரை வீட்டிலேயே குழந்தைகளுக்கு செய்து தருவது தான் நல்லது. இப்பொழுது வீட்டிலேயே எளிய முறையில் பீட்ரூட் அல்வா எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 4

பால் – 2 கப்

சர்க்கரை – 1/2 கப்

ஏலக்காய் பொடி – 1 தேக்கரண்டி

நெய் – 3 தேக்கரண்டி

முந்திரி – சிறிது

உலர் திராட்சை – சிறிது

பாதாம் – சிறிது

கண்டென்ஸ்டு மில்க் – தேவையான அளவு

செய்முறை

முதலில் பீட்ரூட்டை தோலுரித்து அதனை துருவி எடுத்துக்கொள்ளவும். பின் ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி, பாதாம் சேர்த்து குறைவான தீயில் வறுக்கவும். பிறகு அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Beetroot-halwa
Beetroot-halwa

பிறகு துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்கி, பின் அதில் பால் சேர்த்து வேக வைக்க வேண்டும். அதன்பின் சர்க்கரை, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி கொண்டே இருக்கவும். பின் தேவையான அளவு கண்டென்ஸ்ட் மில்க் சேர்த்து கெட்டியாகும் வரை நன்கு கிளறவும். 10 நிமிடங்களுக்கு பிறகு அதில் முந்திரி, பாதாம் மற்றும் உலர் திராட்சை தூவி இறக்கி பரிமாறினால், பீட்ரூட் அல்வா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here