பேபி கார்ன் கபாப் ஒரு தடவை செஞ்சு பாருங்க – குழந்தைங்க மிச்சமே வைக்க மாட்டாங்க.!

0

தேவையான பொருட்கள்

Healthy Cooking with Kusum: How to Steam Corns in Microwave

வேகவைத்து, உதிர்த்த ஸ்வீட் கார்ன், துருவிய காலிஃப்ளவர், வேர்க்கடலைப்பொடி, முந்திரிப்பருப்பு, புதினா தழை, வெங்காயம், கரம் மசாலாத்தூள், ரஸ்க் தூள், பச்சை மிளகாய், ரெட் சில்லி சாஸ், எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து, கார்ன் போட்டு, புதினா, ரெட் சில்லி சாஸ் சேர்த்து வேர்க்கடலைப்பொடி தூவிப் புரட்டி கொத்தமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். சிறு உருண்டைகளாகப் பிடித்து வடை போல தட்டி, விருப்ப வடிவ பிஸ்கட் கட்டரால் அழுத்தி எடுத்து ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும்.

எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஒரு வாணலியில் கொஞ்சம் எண்ணெய்விட்டு சூடாக்கி, இந்த கார்ன் கபாபை அதில் போட்டு இருபுறமும் வேகவிட்டுப் பொன்னிறமானதும் எடுத்து, அதன் ஒவ்வொன்றின் மேலும் முந்திரிப்பருப்பு வைத்து அலங்கரித்து சாஸ் உடன் பரிமாறவும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here