Side Dish என்ன பண்றதுனு தெரியலையா.?? இதை ஒரு தடவை செய்து பாருங்க.!

0

இப்பொழுது ஊரடங்கு உத்தரவால் யாரும் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விரும்பியதை வாங்கி சாப்பிட முடியாமல் இருக்கிறது. இந்த  Soya Fry வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுலபமாக செய்து விடலாம். வாங்க எப்படி செய்யலாம்னு பாப்போம்.

தேவையான பொருட்கள்

மீல்மேக்கர் , 2 முட்டை , மிளகாய்த்தூள்,சோம்பு,  சோளமாவு, உப்பு தேவையான அளவு, பெரியவெங்காயம், தக்காளி. இஞ்சி பூண்டு விழுது

செய்முறை

முதலில் மீல்மேக்கரை சுடு நீரில் போட்டு பிழிந்து எடுத்து கொள்ளவும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு முட்டை சேர்த்து கலந்து கொள்ளவும். பின்பு சோளமாவு, மிளகாய்த்தூள்  சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்  ஊற்றி மீல்மேக்கரை சேர்த்து நன்கு அடிபிடிக்காமல் வதக்கி கொள்ளவும்.

இனிமேல் வீட்டுலயே ஈஸியா செய்யலாம் – Veg Roll.!

கொஞ்சம் நன்கு வதங்கியதும் அதனை ஒரு தட்டில் மாற்றி அதே எண்ணையில் சோம்பு சேர்த்து வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் அது பொன்னிறமாகும் வரை   வதக்கவும். பின்பு தக்காளியை சேர்க்கவும் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள் சேர்க்கவும். அதன்பின் வதக்கி வைத்த மீல்மேக்கரை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு  5 நிமிடம் மூடி வைக்கவும். இப்பொழுது இறக்கி பரிமாறவும்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here