கொரோனா சிகிச்சைக்காக படுக்கை விவரங்கள் பற்றி அறிய வேண்டுமா???

0
கொரோனா படுக்கைகள் விவரங்கள் பற்றி அறிய வேண்டுமா???
கொரோனா படுக்கைகள் விவரங்கள் பற்றி அறிய வேண்டுமா???

தமிழகத்தில் கொரோனாவின் ஆட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.இந்த தொற்றால் மக்கள் பெரும் பீதியில் உள்ளனர்.அதுமட்டுமில்லாமல் மக்களுக்கு போதிய வசதிகளும் நாளுக்கு நாள் குறைந்து தான் கொண்டுப்போகிறது.சரியான மருந்துகளும் இன்னும் எந்த நாடும் கண்டுபிடிக்கவில்லை.எனவே மக்கள் கொரனாவுக்கான சரியான சிகிச்சை முறைகள் மற்றும் அக்சிஜென்,படுக்கை வசதிகள் பற்றி அறிந்துக் கொள்ள இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.

படுக்கை நிலவரம் பற்றி அறிய புது இணையத்தளம்..

கொரோனாவின் ஆச்சம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை அடையச் செய்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் தமிழக அரசு சற்று திணறி  கொண்டிருக்கிறது. அரசு மருத்துவமனையில் மட்டுமல்ல தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள படுக்கைகள் அனைத்தும் நாளுக்கு நாள் நிரம்பி வருகிறது.ஆக்சிஜன் தட்டுப்பாடும் அதிகரித்து வருகிறது,இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.தொற்று உள்ளவர்களுக்கு போதிய வசதிகள் இல்லை, இதனை சரி செய்ய தமிழக அரசு https://stopcorona.tn.gov.in/beds.php என்ற இணையதளம் ஒன்றை ஆரம்பித்துள்ளது அந்த இணையதளத்தின் மூலம் தங்களது மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கைகளின் விவரங்களை மற்றும் ஆக்சிஜன் பற்றியும் மருத்துவமனை வாரியாக அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமல்லாது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த இணையதளத்தில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் பற்றிய நிலவரத்தையும் விவரங்களையும் அப்டேட் செய்து வருகின்றது தமிழக அரசு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here