உங்களுக்கு முடி உதிர்வு பிரச்சனையா?? அப்போ இந்த ஹேர் மாஸ்க் ட்ரை பண்ணி பாருங்க!!

0
hair growth
hair growth

தற்போது மாறி வரும் பழக்க வழக்கங்களால் நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் அனைவரும் பெரும்பாலும் சந்தித்து வரும் பிரச்சனை தலை முடி உதிர்வு தான். இதற்காக கடைகளில் விற்பனை ஆகும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பூகளை பயன்படுத்துவதால் முடியின் வேர்கள் வலுவிழந்து போகின்றன. இந்த முடி உதிர்வை வீட்டிலேயே எளிய முறையில் கட்டுப்படுத்தலாம்.

முடி உதிர்வு:

பெண்கள் மற்றும் ஆண்களுக்கு முக அழகில் தலை முடி என்பது முக்கியமான ஒன்று. அதாவது ஒருவரது தலைமுடி தான் அவர்களின் அழகை தீர்மானிக்கும். எனவே தலைமுடிகளை பராமரிப்பது அவசியமாகும். ஆனால் முடி உதிர்வு பிரச்சனை தற்போது பலருக்கும் ஏற்படுகிறது. எனவே இயற்கையான பொருட்களை வைத்து முடி உதிவு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

hair fall
hair fall

ஆனால் அதனை தொடர்ந்து பயன்படுத்துதல் மிகவும் முக்கியம். கேரளாவில் பெண்கள் சுத்தமான தேங்காய் எண்ணெயை மட்டுமே பயன்படுத்துகின்றனர். தேங்காய் எண்ணெயை தேய்த்து ஷாம்பூ சேர்க்காமல் தலைக்கு குளிக்கின்றனர். மேலும் அவர்கள் இயற்கை பொருட்களையே தலைக்கு பயன்படுத்துகின்றனர். இப்பொழுது முடி உதிர்வை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • பாசிப்பயிறு
  • கருவேப்பிலை
  • அரிசி கழுவிய தண்ணீர்
  • தேங்காய் எண்ணெய்
  • செம்பருத்தி
  • கற்றாழை ஜெல்
  • வடித்த சாதம் நீர்
  • தேங்காய்ப்பால்

செய்முறை

முதலில் பாசிப்பயிறை இரவு முழுவதும் ஊறவைத்து எடுத்துக் கொள்ளவும். காலை எழுந்ததும் பாசிப்பயிறு, செம்பருத்தி, கற்றாழை ஜெல், அரிசி கழுவிய நீர், கருவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய் போன்றவற்றை சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

hair fall solution
hair fall solution

பின்பு அதனை தலையில் தேய்த்து அரை மணிநேரம் கழித்து சிகைக்காய் போட்டு குளிக்கவும். இதனால் முடி வேருக்கு வலு சேர்க்கும். மேலும் முடி உதிர்வை தடுத்து கருமையாக்கும்.

hair fall problems solution
hair fall problems solution

அதன்பிறகு சாதம் வடித்த தண்ணீர், தேங்காய்ப்பால் இந்த இரண்டையும் கலந்து தலைக்கு தேய்த்து ஊறவைத்து பிறகு குளிக்க வேண்டும். இந்த இரண்டையும் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ செய்து வந்தால் முடி உதிர்வை முழுமையாக தடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here