
பொதுவாக ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஞாபக சக்தி என்பது ஒரு முக்கிய ஒரு பங்கு வைக்கிறது. அதிலும் தேர்வுக்கு தயாரிக்கும் மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகமாக இருந்தால் தான் அவர்களால் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். அதிலும் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் காலாண்டு தேர்வு வர இருக்கிறது. இதுபோக தமிழக பொது தேர்வு ஆணையம் குரூப் 1 மற்றும் குரூப் 4 க்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் எந்த மாதிரியான உணவுகளை மாணவர்கள் சாப்பிட்டு வந்தால் ஞாபக சக்தியை அதிகரிக்கலாம் என்பதை தற்போது பார்ப்போம்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
- அதாவது இரவில் தூங்குவதற்கு முன் கேரட் சாற்றை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் நியாபக சக்தி அதிகரிக்கும்.
- இதுபோக பாதாம், வால்நட், பிஸ்தா போன்ற நட்ஸ் வகைகளை சாப்பிடுவதால், இதில் இருக்கும் வைட்டமின் E மூளைக்கு தேவையான ஆற்றலை கொடுக்கும்.
- மேலும் கீரை, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை நம் உணவில் சேர்த்து வந்தால் அதில் இருக்கும் வைட்டமின்கள் நியாபக சக்தி குறைபாட்டை சரி செய்ய உதவும்.
- இது தவிர மீனில் ஒமேகா 3 சத்து இருப்பதால் அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். ஏனென்றால் ஒமேகா 3 அமிலம் நம் மூளையின் செயல்பாட்டை அதிகரித்து கொடுக்கும்.
- மேலும் ப்ளூ பெரி பழங்களில் உள்ள அமில சத்துக்களுக்கு நியாபக குறைபாட்டை தடுக்கும் ஆற்றல் உள்ளது.
- இதோடு க்ரீன் டீ நம் மூளை செல்கள் பாதிப்படையாமல் தடுக்கிறது, தேன் நியாபக சக்தியை அதிகரித்து கொடுக்க கூடியது. இதனால் இவைகளை தொடர்ந்து நம் உணவில் சேர்த்து வந்தால் மூளைக்கு நல்லது.
“மாமன்னன்” படத்திற்கு பிறகு கிடுகிடுவென சம்பளத்தை கூட்டிய வடிவேலு.., இத்தனை கோடியா?