முக சுருக்கத்தை முழுவதுமாக நீக்க சூப்பரான டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

0
face mask
face mask

பல பேருக்கு இளம் வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள், வயதான தோற்றம் ஏற்பட்டு விடுகிறது. இந்த முக சுருக்கங்களை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிய முறையில் போக்கலாம்.

முக சுருக்கம்:

சருமத்தில் சுருக்கம் விழுவதற்கான காரணம் வறட்சி, பொரித்த உணவுகள் அதிகம் எடுத்துக் கொள்வது, உணவு முறைகளை சரிவர கடைபிடிக்காததே. இதனால் தான் இளமை வயதிலேயே முகத்தில் சுருக்கங்கள், தழும்புகள், வயதான தோற்றம் போன்றவை ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், தேவையில்லாத விஷயத்தை போட்டு குழப்பிக் கொள்வது, அதிகமாக யோசிப்பது போன்றவை முகத்தின் அழகையே பாதிக்கிறது. எனவே தியானம், யோகா போன்ற ஆசனங்களை தொடர்ந்து செய்து வர வேண்டும். இதையும் தாண்டி தோல் சுருக்கம் ஏற்படாமல் இருக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன.

தேமல் பிரச்சனையை அடியோடு விரட்ட அருமையான டிப்ஸ் – இதோ உங்களுக்காக!!

face

காய்ச்சிய பாலை ஆற வைத்து அதில் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவிவிட்டு தூங்க வேண்டும். காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு 2 நாளைக்கு ஒரு தடவையாவது செய்ய வேண்டும்.

Face-packs

முடி உதிர்வை 10 நாளில் கட்டுப்படுத்தனுமா?? இந்த ஜூஸ் குடிங்க போதும்!!

பிறகு கேரட் மற்றும் முள்ளங்கி சாற்றில் தேன் கலந்து அதனை முகத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் காய வைக்கவும். அதன்பிறகு ஒரு காட்டன் துணியை வெதுவெதுப்பான நீரில் முக்கி அதனை முகத்தில் துடைக்க வேண்டும்.

face pack in tamil
face pack in tamil

பாதாம் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெயை சரிசமமாக கலந்து சுருக்கம் உள்ள இடங்களில் தேய்த்து மசாஜ் செய்யவும். அதன்பிறகு கடலை மாவு, பாசிப்பயிறு மாவு தேய்த்து முகத்தை கழுவவும். கழுவிய பிறகு பப்பாளி தோலை முகத்தின் 15 நிமிடங்கள் மேல் வைக்கவும். பிறகு முகத்தை கழுவவும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

facial powder
facial powder

இவ்வாறு செய்தால் முக சுருக்கங்கள் நீங்குவதோடு முகத்தில் எண்ணெய் வடியாமல் இருக்கும். இந்த வழிமுறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வர வேண்டும். மேலும் துவர்ப்பு சுவை இளமையான சருமத்திற்கு வழிவகுக்கும். எனவே தான் வாழை தண்டு, வாழைப்பூ, நெல்லிக்காய் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வந்தால் முக சுருக்கத்தை 100% நீக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here