அழகான சிவந்த உதடுகளை வீட்டிலேயே பெற வேண்டுமா?? நச்சுனு 7 டிப்ஸ் இதோ!!

0

நமது முகத்திலேயே மிகவும் மிருதுவான பகுதி நமது உதடுகள் தான். எந்த பருவ மாற்றம் வந்தாலும் முதலில் பாதிக்கப்படுவது நமது உதடுகள் தான். பருவமற்றதால் வறண்டு, கருத்து போய் விடுகிறது. இதை வீட்டிலேயே எப்படி சரி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

1. தேன் மற்றும் சர்க்கரை ஸ்கிரப்:

பொதுவாக நமது உதட்டில் இருக்கும் இறந்த செல்கள் வெளியேறாமல் இருப்பதாலேயே உதடுகள் கருப்பாக காட்சி அளிக்கும். இதை சரி செய்வதற்காக 1 ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து உதட்டில் 1 நிமிடத்திற்கு மசாஜ் செய்து 5 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை இதை செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்.

2. ரோஜா இதழ் மற்றும் பால்:

5 முதல் 6 ரோஜா இதழ்களை 1/4கப் அளவு பாலில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதை இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். காலையில் இதை நன்கு பேஸ்ட் போல் மசித்து கொள்ள வேண்டும். இந்த கலவையை 15 நிமிடங்கள் உதட்டின் மீது பூச வேண்டும். இதை தினமும் கூட செய்து வரலாம்.

3. மஞ்சள் தூள் மற்றும் பால்:

1/2 டீ ஸ்பூன் மஞ்சள் தூளை 1 டீ ஸ்பூன் பாலில் சேர்த்து பேஸ்ட் போல் குழைத்துக் கொள்ள வேண்டும். இதை உதட்டின் மீது பூச வேண்டும். மஞ்சள் தூள் காய்ந்ததும் அதை கழுவி விடலாம். கழுவிய பின்பு உதட்டில் தேங்காய் எண்ணெய் பூச வேண்டும்.

4. பீட்ரூட்:

பீட்ரூட்டின் சிறிய துண்டை அவ்வப்போது உதட்டின் மீது தேய்த்து விட வேண்டும். அல்லது பீட்ரூட் சாறை எடுத்து பூசலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

5. எலுமிச்சை மற்றும் சர்க்கரை:

எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதன் ஒரு பாதியில் சர்க்கரை தூவி உதட்டின் மீது 2 அல்லது 3 நிமிடங்கள் தேக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்யலாம்.

6. புதினா மற்றும் தேன்:

5 அல்லது 6 புதினாவின் சாறுடன் பாதி அளவு எலுமிச்சை சாறு மற்றும் சிறிது தேன் சேர்த்து உதட்டில் பூசி வரலாம். வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வரலாம்.

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ‘பொங்கல் பரிசாக’ ரூ.2500!!

7. மாதுளை மற்றும் பால்:

1/2 கப் அளவு மாதுளை பலத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும். இந்த பேஸ்டை தினமும் 2 அல்லது 3 முறை கூட போடலாம். நல்ல மாறுதல் இருக்கும். இந்த முறைகளை நாம் சரியாக பின்பற்றி வந்தாலே நமது உதட்டின் கருமை நிறம் மாறி அழகாக சிவந்த உதடுகளாக மாறி விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here