இந்த 3 சொட்டு போதும் உங்க முகத்தை பளபளப்பாக மாற்ற – தவறாம படிங்க!!

0
nazriya
nazriya

சருமத்திற்கு அழகை அதிகரிக்க மற்றும் மற்றும் சரும பிரச்சனைகளை தீர்க்க வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து ஃபேஸ் கிரீம் எப்படி தயார் செய்வது என்பதை இந்த பதிவில் காண்போம். இது அனைத்து விதமான சருமத்திற்கு ஏற்றது. வாங்க பார்க்கலாம்.

சரும பிரச்னைகள்:

சரும பிரச்சனைகள்
ஏற்படுவதற்கு நமது உணவு பொருட்களும் காரணம். எண்ணெய் பதார்த்தங்களை அதிகமாக உணவில் எடுத்துக் கொள்ளும் போது நம் முகத்தில் தேவையில்லாத எண்ணெய் சுரப்பிகள் உருவாகிறது.

face mirror
face mirror

மனக்கவலையும் ஒருவரின் முகத்தில் பிரதிபலிக்கும். எனவே தான் நாம் யோகா, தியானம் செய்வது மூலமும் ஆரோக்கியத்தை பேணலாம். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பது பழமொழி. எனவே தான் நமது உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும்போது நமது முகமும் பிரகாசிக்கும். நாம் ஃபேஸ் கிரீம் பயன்படுத்தினாலும் உணவிலும் கட்டுப்பாடு தேவை.

ஃபேஸ் கிரீம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

கற்றாழை

டீ ட்ரி ஆயில்

ரோஸ் வாட்டர்

செய்முறை

முதலில் கற்றாழையை தோல் சீவி அதனை 4 முறை நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது அதனை கேரட் துருவுவதை போல துருவி எடுத்துக் கொள்ளவும். இப்பொழுது அது ஜெல் போல வரும் அதில் மஞ்சள்தூள், ரோஸ் வாட்டர், டீ ட்ரி ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

face mask
face mask

அதனை ஒரு டப்பாவில் போட்டு பிரிட்ஜில் வைத்து அதனை இரவு தூங்கும்போது 3 துளிகள் எடுத்து அதனை முகத்தில் தேய்த்து தூங்க வேண்டும். காலையில் எழுத்து கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து இறந்த செல்களை முழுவதுமாக நீக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here