தூக்கமின்மையால் அவதிபடுகிறீர்களா.., படுத்தவுடன் தூங்க வேண்டுமா? கண்டிப்பாக இதை செய்யுங்கள்!!

0
தூக்கமின்மையால் அவதிபடுகிறீர்களா.., படுத்தவுடன் தூங்க வேண்டுமா? கண்டிப்பாக இதை செய்யுங்கள்!!
தூக்கமின்மையால் அவதிபடுகிறீர்களா.., படுத்தவுடன் தூங்க வேண்டுமா? கண்டிப்பாக இதை செய்யுங்கள்!!

நம்மில் பலரும் சந்தித்து வரும் பிரச்சனை தான் தூக்கமின்மை. தூக்கமின்மை என்பது தற்போது ஒரு குறைபாடாக இல்லாமல் ஒரு நோயாக மாறி வரும் நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.இதற்கு முன்பு நாம எப்ப தூங்கணும் எப்போ எந்திரிக்கனும்னு நாம முடிவு எடுத்த காலம் மாறி,இப்போ நாமா எப்ப தூங்கணும் என்பதை நம்ம கையில இருக்க ஸ்மார்ட்போன் தான் தீர்மானிக்கிறது என்பதை நினைத்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனா இதே நிலைமை தொடராமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம இருக்கோம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தூக்கமின்மையை குறைப்பதற்கு நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் நம்முடைய உணவு பழக்க முறையை மாற்ற வேண்டும்.

1. தூங்கச் செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே நம்முடைய நைட்டு உணவை எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது

2. இரவு நேரத்தில் காரசாரமான மற்றும் புளிப்பு வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும். இந்த இரண்டும் செரிமானத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால் நமது உடல் உறுப்புகள் இரவு நேரத்தில் செயல்திறன் குறைகிறது.

3. ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாட்களுக்கு மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இரவு நேரத்தில் படுப்பதற்கு முன்பாக அதிகமான அளவு தண்ணீர் குடிப்பதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்.

4. இரவு நேரம் அதிகமாக தண்ணீர் குடிப்பதால் சிறுநீர் கழிப்பதற்கு நாம் எழுந்திருக்கும் பொழுது நம்முடைய தூக்கம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

5. உறங்குவதற்கு முன்பு சில உடற்பயிற்சிகள் மேற்கொள்வதன் மூலம் நம்முடைய தூக்கமின்மையை குறைக்க உதவும்.

6. மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலமும் தூக்கமின்மையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது நிபுணர்களின் ஒரு ஆலோசனை.

7. மல்லாக்க படுப்பதை தவிர்த்து வலது பக்கமும் இடது பக்கமும் திரும்பி படுப்பதன் மூலம் குறட்டை விடுவதை கட்டுக்குள் கொண்டு வந்து அதன் மூலம் தூக்கமின்மையை குறைக்கலாம்.

8.சில உணவுப் பொருட்களை நம் உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் தூக்கமின்மை கட்டுக்குள் வைத்திருக்கலாம். அவை பாதாம் பிஸ்தா,வாழைப்பழம், பால் போன்ற உணவுப் பொருட்கள் தூக்கத்தை அதிகரிக்க உதவும்.

9. தூங்குவதற்கு முன்பு காபி, ஆல்கஹால், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்களை கைவிடுவதன் மூலம் தூக்கமின்மையை கட்டுக்குள் வைத்து இருக்கலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

10. தொலைக்காட்சி, கணினி, ஸ்மார்ட்போன்கள்,போன்றவற்றை நான் தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு நம் படுக்கையில் இருந்து அப்புறப்படுத்துவது மிக்க நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here