ஜாதகத்தில் விபரீத ராஜயோகம் யாருக்கு?? தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

0
vibareetha rajayogam

ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவரின் அனைத்து பலன்களையும் சொல்ல முடியும். உலகத்தில் பிறந்த அனைவரும் யோகங்களை பெறுவதில்லை. கஷ்டப்பட்டு முன்னேறும் போது மட்டுமே அவர்கள் அதன் பயனை அடைய முடியும். இப்பொழுது நமது ஜாதகத்தை வைத்து விபரீத ராஜயோகம் யாருக்கு என்பதை கணக்கிடலாம்.

விபரீத ராஜயோகம்:

ஒருவரின் ஜாதக கட்டத்தில் ஒரு கிரகம் உச்சம், ஆட்சி பெற்றிருந்தால் மட்டுமே அவர்களுக்கு யோக அமைப்பு கிடைப்பதில்லை. நீசம் பெற்றிருந்தால் கூட அவர்களுக்கு ராஜயோகம் கிட்டும். இதற்கு குரு பலன்கள் மிக முக்கியம். அதாவது ஒருவருக்கு ஜாதகத்தில் 4 கிரகங்கள் உச்சம் பெற்றிருந்தாலும் அவர்களும் கஷ்டப்படத்தான் செய்கிறார்கள். ஆட்சி, உச்சம் மட்டும் அவர்களின் யோக நிலையை குறிப்பிடாது. நீச கிரகங்களும் ஒருவரின் யோகத்தை குறிப்பிடும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

ramar-jathagam
ramar-jathagam

ஒரு கிரகம் நீசம் அடையும் போது அந்த நீச கிரகம் இன்னொரு நீசனை பார்த்தால் அது நீசபங்க ராஜயோகமாக கருதப்படும். அதாவது தனது முன்பகுதி வாழ்க்கையில் கஷ்டப்பட்டு பின்பகுதி வாழ்க்கையில் யோகங்களை அனுபவிப்பார். எடுத்துக்காட்டாக மக்கள் அனைவரும் போற்றும் ஸ்ரீ ராமரின் ஜாதகத்தில் 4 உச்ச கிரகங்கள் இருந்தன.

amitabh-bachchan-birth-chart
amitabh-bachchan-birth-chart

ஆனால் அவர் தனது இளமை பருவத்தில் மனைவியை தொலைத்து 14 வருடங்கள் காட்டில் வாழ்ந்தார். அவரின் ஜாதகத்தில் சுப கிரங்கங்கள் உச்சம் பெற்றும் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டது. எனவே உச்ச கிரகங்கள் மட்டுமே ஒருவரின் வாழ்க்கை யோகத்தை தராது. ராசிக்கட்டத்தில் சுக்ரன் நீசமடைந்தால் அவர்களால் கலைத்துறையில் சாதிக்க முடியாது. ஹிந்தியில் பிரபல நடிகராக திகழும் அமிதாப் பச்சனுக்கு ஜாதகத்தில் சுக்ரன் நீசம் தான். ஆனால் அவர் கலைத்துறையில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

ஏனெனில் அவருக்கு நீசபங்க ராஜயோகம். கணிதத்தில் (- * -=+) என்பது போல ஒரு நீசனை நீசன் பார்த்தால் ராஜயோகம் கிட்டும். அதேபோல விபரீத ராஜயோகம் என்பது லக்கினம் வலுப்பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் லக்கினத்தில் நீச கிரகங்கள் இருக்க வேண்டும். குரு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களை பார்க்க வேண்டும். இது ஒருவருக்கு விபரீத ராஜயோகத்தை பெற்றுத்தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here