கடாய் பன்னீர் இனிமேல் ஈஸியா செய்யலாம் – வாங்க பார்க்கலாம்.!

0

தேவையான பொருட்கள்

Learn how to make Kadai Paneer - A spicy Indian cheese dish -

பன்னீர், குடைமிளகாய், வெங்காயம், தக்காளி, மிளகாய் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், இஞ்சி பூண்டுபேஸ்ட் எண்ணெய், பச்சை மிளகாய்,கொத்தமல்லி, உப்பு, தக்காளி, மல்லி, வரமிளகாய்

செய்முறை

முதலில் மல்லி மற்றும் வரமிளகாயை லேசாக வறுத்து, பின் அவற்றை மிக்ஸியில் போட்டு, அத்துடன் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் பன்னீரை தட்டில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Kadai Paneer - Cook With Manali

பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அத்துடன் வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி, பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி பேஸ்ட்டை சேர்த்து, அத்துடன் மசாலா பொருட்களையும் சேர்த்து கிளறி தேவையான அளவு உப்பு தூவி பச்சை வாசனை போக வேக வைக்க வேண்டும்.

रेस्टोरेंट जेसा कडाई पनीर बनये घर पर ...

பிறகு அதில் குடைமிளகாயை சேர்த்து 4 நிமிடம் வதக்கி, 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கினால், கடாய் பன்னீர் தயார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here