சுவையான பாகற்காய் வறுவல் – இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா குழந்தைகள் மிச்சமே வைக்க மாட்டாங்க!!

0
bitter recipes
bitter recipes

பாகற்காய் காய்கறிகளில் அதிக சத்துக்கள் நிறைந்த உணவாகும். ஆனால் இதன் கசப்பு தன்மையால் பலரும் உண்ண விரும்புவதில்லை. ஆனால் பாகற்காய் சாப்பிடுவதால் முகப்பரு, கருப்பு தழும்புகள் மற்றும் சரும தொற்றுகள் போன்றவற்றை குணப்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கூட சிறப்பான மருந்து இந்த பாகற்காய். இப்பொழுது இந்த பாகற்காயை வைத்து அருமையான டிஷ் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

bitter gourd recipes
bitter gourd recipes

பாகற்காய் – 3

மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு

கடலைமாவு – 1 தேக்கரண்டி

அரிசி மாவு – 1 தேக்கரண்டி

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

தயிர் – 1 கப்

செய்முறை:

முதலில் பாகற்காயை தண்ணீரில் வேகவைத்து காயவைக்கவும். ஏனெனில் அதில் உள்ள கசப்பு தன்மையை போக்க இவ்வாறு வேக வைத்து எடுக்க வேண்டும். இப்பொழுது காயவைத்து எடுத்த பாகற்காயில் உப்பு, மிளகுத்தூள், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

பாகற்காய்-வறுவல்
பாகற்காய்-வறுவல்

அதன் பிறகு அதில் கடலைமாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி இந்த பாகற்காயை தனி தனியாக பொரித்து எடுக்கவும் அல்லது தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும். இப்பொழுது சுவையான பாகற்காய் வறுவல் தயார். இவ்வாறு செய்து தருவதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here