இந்திய அரசானது பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இந்த நலத்திட்டங்களை பெற மக்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்டவற்றுடன், இனி பான் கார்டு வைத்திருப்பதும் அத்தியாவசியமான ஒன்றாக மாற உள்ளது. பான் கார்டு வைத்துள்ள பலர், நகல் பான் கார்டையும் உடன் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள். இதற்காக, ரூ.200-க்கு மேல் செலவும் செய்து வருகிறார்கள். வெறும் ரூ.50 இருந்தால் போதும், ஆன்லைன் வாயிலாக தங்களை நகல் பான் கார்டு எடுத்துக் கொள்ளலாம்.
Enewz Tamil WhatsApp Channel
நகல் பான் கார்டு எடுப்பதற்கான வழிமுறைகள்:
- கூகுளில் Reprint Pan Card என்று டைப் செய்து தேட வேண்டும்.
- Request for Reprint of PAN Card – NSDL என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிளிக் செய்து கொள்ளவும்.
- ஆதார் எண், பான் எண், பிறந்த தேதி மற்றும் கேப்ட்சா குறியீடு உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு டிக் கொடுத்து விட்டு ‘Submit’ செய்யவும்.
- இதன் பிறகு, திறக்கும் பக்கத்தில் PAN தொடர்பான அனைத்து தகவல்களும் பதிவு செய்ய வேண்டும்.
- Request OTP என்பதை கிளிக் செய்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும், அதை இங்கே உள்ளிடவும்.
- இதன் பின் நகல் பான் கார்டைப் பெற நெட் பேங்கிங் அல்லது UPI ஐ மூலம் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.
- பணம் செலுத்திய பிறகு, உங்களது நகல் பான் கார்டு அடுத்த 7 நாட்களுக்குள் டெலிவரி செய்யப்படும்.