இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.., இலவச கேஸ் சிலிண்டர்க்கு விண்ணப்பிப்பது எப்படி.., முழு விவரம் இதோ!!!

0
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்.., இலவச கேஸ் சிலிண்டர்க்கு விண்ணப்பிப்பது எப்படி.., முழு விவரம் இதோ!!!

மாதந்தோறும் சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மத்திய அரசு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயன்பெறும் வகையில் உஜ்வாலா யோஜனா 2.0 என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின் மூலம் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு சிலிண்டர் இணைப்புடன் அடுப்பும் வழங்கி வருகின்றனர். இதற்காக மத்திய அரசு ரூ.8000 கோடி நிதி ஒதுக்கி இத்திட்டத்தை தற்போது வரை செயல்படுத்தி வருகின்றனர். இத்திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் நிலையில் இன்னும் இது பற்றி தெரியாமல் பல குடும்பங்கள் உள்ளனர். அவர்கள் இத்திட்டத்தின் கீழ் எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

விண்ணப்பிக்க தேவையான தகுதி:

  • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பெண் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.
  • அதேபோல் அவருக்கு இதுவரை சமையல் சிலிண்டர் இணைப்புகள் எதுவும் இருக்கக் கூடாது.
  • மேலும் விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருந்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரில் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

  • இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க நகராட்சி மற்றும் பஞ்சாயத்து தலைவர் வழங்கிய வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கான சான்றிதழ், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நம்பர், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஜாதி சான்றிதழ், முகவரி. பின் அந்த விண்ணப்பதாரரின் ஒப்புதல் கடிதம், வங்கி கணக்கு, வங்கி பாஸ்புக் போன்ற ஆவணங்கள் கட்டாயம் தேவை.

விண்ணப்பிக்கும் முறை:

  • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க www.pmuy.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  • பின் அதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதன் பின் அவர்களது விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர்கள் என்றால் சிலிண்டர் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here