வீட்டுவசதி திட்டம்.,, புதிய ஆன்லைன் வசதியை அறிமுகம் செய்த அரசு!!

0
வீட்டுவசதி திட்டம்.,, புதிய ஆன்லைன் வசதியை அறிமுகம் செய்த அரசு!!
வீட்டுவசதி திட்டம்.,, புதிய ஆன்லைன் வசதியை அறிமுகம் செய்த அரசு!!

மத்திய அரசின் வீட்டு வசதி திட்டம் குறித்து பொதுமக்கள் நேரடியாக கருத்துகளை தெரிவிக்க புதிய ஆன்லைன் வசதியை அரசு அறிமுகம் செய்துள்ளது.

வீட்டு வசதி திட்டம்:

மத்திய அரசின் “வீட்டு வசதி திட்டம் ” நாட்டின் சாமானிய மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 2015ம் ஆண்டு அமலுக்கு வந்தது. இந்த திட்டத்தில் நகர்ப்புறம், கிராமப்புறம் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த திட்டம் மத்திய அரசின் திட்டம் என்றாலும் மாநில அரசும் நிதி ஒதுக்குகிறது. மேலும் இத்திட்டத்தின் கீழ் 25 சதுர மீட்டர்/ 269 சதுர அடிகள் கொண்ட வீடு காட்டப்படுகிறது. இதில் ஒரு ஹால், ஒரு ரூம், ஒரு கிச்சன், ஒரு டாய்லெட் ஆகியவை உள்ளடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தை அரசு மேலும் விரிவுபடுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள், என்பதை அறிந்து கொள்ள மத்திய வீட்டுவசதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் பொது மக்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் குறித்து கருத்துக்களை “www.eol2022.org/CitizenFeedback” என்ற தளம் வாயிலாக நேரடியாக தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here