ஹோட்டல் டேஸ்ட்டில் வீட்டிலயே சிக்கன் லாலிபாப் செய்வது எப்படி??? இங்க பாத்து தெரிஞ்சுக்கோங்க!!!

0

நம்மில் பலர் ஹோட்டலுக்கு செல்லும் போது அவர்கள் தரும் மெனு கார்டு பார்த்து பிரமித்து இருப்போம். மேலும் அதில் இருக்கும் உணவு வகைகள் பெயர்கள் மற்றும் சுவை நாம் அறியாத ஒன்று. இந்நிலையில் அந்த உணவுகளை சுவைப்பதற்கு அனைவருக்கும் ஆசை இருக்கும். தற்போது இந்த பதிவில் சிக்கன் லாலிபாப் எப்படி செய்வது என்பதை காண்போம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் விங்ஸ் – 7

சோயா சாஸ் – 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு – பாதி

மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி

உப்பு – தேவையான அளவு

மிளகு தூள் – தேவையான அளவு

மைதா மாவு – 1/4 கப்

சோள மாவு – 1/4 கப்

முட்டை – 1

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் வாங்கி வைத்து உள்ள சிக்கன் விங்ஸ்களை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும். அந்த சிக்கன் துண்டுகளில் மூன்று பாகம் இருக்கும் அதில் கீழே இருக்கும் சிறிய பகுதியை வெட்டி விடவும், அதன் பின்னர் அதில் இருக்கும் எலும்புகளின் சதையை கத்தியின் உதவு கொண்டு மேலே தள்ளி லாலிபாப் போன்ற வடிவத்திற்கு கொண்டு வரவும்.

அதன் பின்னர், ஒரு பாத்திரத்தில், சோயா சாஸ்,இஞ்சி பூண்டு விழுது,அரை எலுமிச்சை சாறு,மிளகாய் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். பிறகு தயார் செய்து வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து, அவற்றின் அனைத்து பகுதிகளிலும் மசாலா படுமாறு நன்றாக தடவி கொள்ளவும். இந்த கலவையை கிட்டத்தட்ட 30 நிமிடத்திற்கு ஊறவைக்க வேண்டும்.

அதன் பின்னர் இன்னொரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, முட்டை,சிறிதளவு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து ஓரளவிற்கு கெட்டியான பதத்தில் கிளறி கொள்ள வேண்டும். இதையடுத்து ஊற வைத்து உள்ள சிக்கன் துண்டுகளை இந்த கலவையில் முக்கி, எண்ணையில் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொரித்து எடுக்கவும். தற்போது சுவையான மனமான ஹோட்டல் டேஸ்டில் சிக்கன் லாலிபாப் தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here