அசைவ foodiesக்கு ஒரு குட் நியூஸ்.., ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் குருமா.., இந்த சுவையில் சமைத்து பாருங்க!!!!

0
அசைவ foodiesக்கு ஒரு குட் நியூஸ்.., ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் குருமா.., இந்த சுவையில் சமைத்து பாருங்க!!!!
அசைவ foodiesக்கு ஒரு குட் நியூஸ்.., ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் குருமா.., இந்த சுவையில் சமைத்து பாருங்க!!!!

நான் வெஜ் பிரியர்களுக்கு மிகவும் பிடித்தமான சிக்கனை வைத்து கொஞ்சம் வித்தியாசமான ஹோட்டல் சுவையில் சிக்கன் குருமா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 1/2 கிலோ
  • தக்காளி – 2
  • பெரிய வெங்காயம் – 2
  • பச்சை மிளகாய் – 3
  • சோம்பு – 2 டீஸ்பூன்
  • தேங்காய் – 1 கப்
  • கொத்தமல்லி இலைகள்- சிறிதளவு
  • பட்டை கிராம் ஏலக்காய் – சிறிதளவு
  • எண்ணெய் – 3 டீஸ்பூன்
  • கசகசா – 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

செய்முறை விளக்கம்

இந்த சிக்கன் குருமா ரெசிபி செய்வதற்கு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, போட்டு தாளித்து நறுக்கிய வைத்துள்ள பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ளவும். அதன் பிறகு 2 தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய், சோம்பு, பச்சை மிளகாய் கசகசா போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கடாயில் கலந்து கொள்ளவும். இப்பொழுது நாம் கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை இதில் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு 15 நிமிடங்களுக்கு பிறகு சிறிதளவு கொத்தமல்லி இலைகளை போட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்பொழுது நமக்கு சுவையான சிக்கன் குருமா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here