ஹோட்டல் ஸ்டைல் இறால் குடைமிளகாய் கறி… வீட்டில செஞ்சு அசத்துங்க!!!

0
ஹோட்டல் ஸ்டைல் இறால் குடைமிளகாய் கறி... வீட்டில செஞ்சு அசத்துங்க!!!
ஹோட்டல் ஸ்டைல் இறால் குடைமிளகாய் கறி... வீட்டில செஞ்சு அசத்துங்க!!!

கடல் உணவுகளில் மிகவும் சுவையான மற்றும் அனைவராலும் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய உணவு வகை இறால். இது உடலுக்கு பல விதத்தில் நன்மை தரக்கூடிய ஒன்று. மேலும் கடல் உணவுகளில் முள் இருப்பதால் சிறுவர்கள் மீன் சாப்பிடுவதில் கஷ்டம் இருக்கும். ஆனால் இறாலில் முள் என்பது இருக்காது. இதனாலேயே இறால் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இந்நிலையில் இந்த பதிவில் இறால் மற்றும் குடைமிளகாய் வைத்து இறால் குடைமிளகாய் கறி எவ்வாறு செய்வது என்பதை காணலாம்.

ஹோட்டல் ஸ்டைல் இறால் குடைமிளகாய் கறி... வீட்டில செஞ்சு அசத்துங்க!!!
ஹோட்டல் ஸ்டைல் இறால் குடைமிளகாய் கறி… வீட்டில செஞ்சு அசத்துங்க!!!

தேவையான பொருட்கள்:

இறால் – 1 கிலோ

பச்சை குடைமிளகாய் – 2

சிவப்பு குடைமிளகாய் – 2

வெங்காயம் – 1

தக்காளி – 1

இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி

கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் – 1/4 தேக்கரண்டி

மல்லி தூள் – 1 தேக்கரண்டி

பட்டை,சோம்பு,கிராம்பு, அன்னாசி பூ – தலா 1

புதினா – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

ஹோட்டல் ஸ்டைல் இறால் குடைமிளகாய் கறி... வீட்டில செஞ்சு அசத்துங்க!!!
ஹோட்டல் ஸ்டைல் இறால் குடைமிளகாய் கறி… வீட்டில செஞ்சு அசத்துங்க!!!

செய்முறை:

ஒரு கடாயில் எண்ணைய் ஊற்றி அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, அன்னாசி பூ ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அதில் நறுக்கி வைத்து உள்ள வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் தக்காளியை சேர்த்து கொண்டு பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். அதில் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்து உள்ள பச்சை குடைமிளகாய், சிவப்பு குடைமிளகாய்களை சேர்த்து கிளறி கொள்ள வேண்டும்.

அதனுடன் கரம் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள் அதில் சிறிது தண்ணீர் தெளித்து ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் சுத்தம் செய்து வைத்த இறால்களை அதில் போட்டு உப்பு சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இறால் பக்குவமாக வெந்து வந்த பிறகு மிளகு தூள், புதினா மற்றும் கொத்தமல்லி தூவி இறக்கி விட வேண்டும். தற்போது சுவையான மணமான இறால் குடைமிளகாய் கறி ரெடி.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here