இந்தியாவில் முதல் முறையாக இரு மாநிலங்களுக்கிடையே மெட்ரோ ரயில் சேவை., தமிழ்நாடு to கர்நாடகா!!!

0
இந்தியாவில் முதல் முறையாக இரு மாநிலங்களுக்கிடையே மெட்ரோ ரயில் சேவை., தமிழ்நாடு to கர்நாடகா!!!
இந்தியாவில் முதல் முறையாக இரு மாநிலங்களுக்கிடையே மெட்ரோ ரயில் சேவை., தமிழ்நாடு to கர்நாடகா!!!

தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தியாவிலே முதல் முறையாக இரு மாநிலங்களுக்கிடையே மெட்ரோ ரயில் சேவை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஓசூரில் இருந்து பெங்களூருக்கு வேலை நிமித்தமாக தினந்தோறும் லட்சக்கணக்கானோர் பயணித்து வருவதால், ஓசூர் to பொம்ம சந்திரா வழித்தடங்களுக்கிடையே மெட்ரோ ரயில் சேவை வழங்க உள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த மெட்ரோ ரயில் சேவை தமிழ்நாடு எல்லைக்குள் 8.8 கி.மீ. மற்றும் கர்நாடக எல்லைக்குள் 11.7 கி.மீ. என மொத்தமாக 20.5 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான ஆய்வு அறிக்கை தயாரிக்கும் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் துணைத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கொட்டி கிடக்கும் வாய்ப்புகள்…, மாநில திட்டக் கல்வி இயக்ககம் வெளியீடு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here