சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
மதிப்பூதியம் ரத்து:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வரிவசூல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அரசுக்கு வருமானம் குறைந்து உள்ளது. இதனை சமாளிக்கும் பொருட்டு மற்ற மாநிலங்களைப் போல் ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்காமல், தமிழக அரசு வேறு வழிமுறைகளை கையாண்டு உள்ளது. அந்த வகையில் அரசின் செலவுகளை குறைக்கும் பொருட்டு பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அந்த வகையில் புதிய அரசுப் பணிகளை உருவாக்குதற்கு தடை உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வாட்ஸ்ஆப் குரூப்களில் பகிரப்படும் 8ல் ஒரு போட்டோ போலி – ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!
தற்போது சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ‘மதிப்பூதியம்’ ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. மேலும் ஏற்கனவே வழங்கப்பட்ட மதிப்பூதியம் திரும்பப் பெறப்படுவதாக தமிழக நிதித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காரணத்தால் அரசு ஊழியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட மதிப்பூதியம் வழங்குவது நிறுத்திவைக்கப்படும். இந்த உத்தரவு அரசு ஊழியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.