எதிர் அணியவே கவிழ்த்திய விராட் கோலி – டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.., வைரலாகும் வீடியோ!

0
எதிர் அணியவே கவிழ்த்திய விராட் கோலி – டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.., வைரலாகும் வீடியோ!
எதிர் அணியவே கவிழ்த்திய விராட் கோலி – டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.., வைரலாகும் வீடியோ!

ஹாங்காங் அணிக்கு எதிரான தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய அணி வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடியதற்கு எதிர் அணி வீரர்கள் அவரைப் பாராட்டி அவர்களது ஜெர்சியை பரிசாக கொடுத்துள்ளனர்.

கோலிக்கு ஹாங்காங் கொடுத்த பரிசு!

ஆசிய கோப்பை தொடருக்கான அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தற்போது சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதற்கும் முன்பாக இந்திய அணி ஹாங்காங் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 192 ரன்கள் எடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதில் விராட் கோலி பல வருடங்கள் கழித்து தனது அரை சதத்தை பதிவு செய்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது மட்டுமல்லாமல் ஹாங்காங் அணி வீரர்கள் இவரை பாராட்டி தங்கள் அணியின் ஜெர்சியை பரிசாக கொடுத்தனர். மேலும் அந்த ஜெர்சியில் “ஒரு தலைமுறைக்கு ஊக்கமாக இருந்ததற்கு நன்றி” என்ற தகவலையும் அதில் பதிவிட்டுள்ளனர். ஹாங்காங் அணி வீரர்கள் அளித்த பரிசுக்கு விராட் கோலி நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த போட்டி முடிந்த பிறகு ஹாங்காங் அணி வீரர்கள் அனைவரும் இந்திய வீரர்கள் தங்கியிருந்த டிரெஸ்ஸிங் ரூமிற்குள் சென்று போட்டியில் விளையாடுவது பற்றி சில ஆலோசனைகளை பெற்றுக் கொண்டனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் எதிரணி தோல்வியடைந்தாலும் இப்படி வந்து சகஜமாக பேசுகிறதை பார்த்தால் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் உள்ளது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here