‘போவோமா ஊர்கோலம்’…,5 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசம்….,ஹாங்காங் அரசு அதிரடி!!

0
'போவோமா ஊர்கோலம்'...,5 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசம்....,ஹாங்காங் அரசு அதிரடி!!
'போவோமா ஊர்கோலம்'...,5 லட்சம் விமான டிக்கெட்டுகள் இலவசம்....,ஹாங்காங் அரசு அதிரடி!!

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கத்தோடு, வெளிநாட்டு பயணிகளுக்கு 5 லட்சம் விமான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குவதாக ஹாங்காங் அரசு அறிவித்துள்ளது.

இலவச டிக்கெட்

நம்மில் பலருக்கும் வெளிநாடுகளை சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அதற்கு பெரும் செலவு ஏற்படும் என்பதால் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதில் சிலர் தயக்கம் காட்டுவது உண்டு. அப்படிப்பட்டவர்களுக்காக, ஹாங்காங் அரசாங்கம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஒரு ரூபாய் செலவில்லாமல் ஹாங்காங்கை சுற்றிப்பார்க்க அனுமதிப்பதாக ஹாங்காங் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

கொரோனா பெருந்தொற்று காலங்களில் பாதிக்கப்பட்ட சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு 5 லட்சம் இலவச விமான டிக்கெட்டுகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த சலுகை மூலம் ஹாங்காங் வரும் நபர்கள் குறைந்தபட்சம் 2 நாட்களாவது அந்நாட்டில் தங்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

லைகா தயாரிப்பு நிறுவனத்தின் அப்டேட் நாளை வெளியீடு….,ஒருவேளை இதுவா இருக்குமோ?…,

மேலும், சுற்றுலா பயணிகள் எந்தவிதமான கொரோனா கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், மலேசியா, வியட்நாம், இந்தோனேஷியா, கம்போடியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பயணிகளுக்கு இந்த சலுகை பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here