கலைஞர் நூற்றாண்டு விழா: திருநங்கைகள் 100 பேருக்கு வீடு…, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவிப்பு!!

0
கலைஞர் நூற்றாண்டு விழா: திருநங்கைகள் 100 பேருக்கு வீடு..., நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அறிவிப்பு!!

தமிழகத்தில், கலைஞர் மு கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை வழங்குதல், பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை அரசு செய்து வருகிறது. இதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் இருக்க, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்காகவும் சிறப்பு சலுகையை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மது பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.., இனி போலீசில் மாட்ட வேண்டிய அவசியமில்லை.., இத்தாலி அரசு சூப்பர் அறிவிப்பு!!!!

அதாவது, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கலைஞரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நினைவுப்படுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் என 100 பேருக்கு வீடுகள் வழங்க முடிவு செய்த்துள்ளது. இதனை, அடுத்த மாதமே செயல்படுத்த வேண்டி 100 அடுக்குமாடி குடியிருப்புகளை தேர்வு செய்து, அதன் ஒதுக்கீட்டாளருக்கு விற்பனை பத்திரம் வழங்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here