ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் மறைவு – வருத்தத்தில் ரசிகர்கள்!!

0
ஹாலிவுட் நடிகரான சிட்னி போய்ட்டியர் இன்று தனது வீட்டில் வயது மூப்பின் காரணமாக காலமானார். இந்த துக்க செய்தியை கேட்ட அவரின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.
நடிகர்  சிட்னி போய்ட்டியர்:
கருப்பினத்தை சேர்ந்த சிட்னி போய்ட்டியர் 1950 முதல் 1960 வரை உள்ள காலகட்டத்தில் மக்களை கவரும் வண்ணம் நிறைய படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் அமெரிக்கா மற்றும் பஹாமாஸ் என இரு நாட்டு குடியுரிமையை பெற்றவர். ‘லில்லிஸ் ஆப் தி பீல்ட்’ படத்தில் தன் நடிப்பின் திறமையை வெளி கட்டி ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றார்.  மேலும் கருப்பு இனத்தில் முதல் ஆஸ்கர் விருது பெற்ற நடிகர் என்ற பெருமை இவரையே சாரும்.
மேலும் 2009ல் அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா  ‘US Presidential Medal of Freedom’ என்ற விருதை இவருக்கு கொடுத்து மேலும் கவுரவம் செய்துள்ளார். இந்த நிலையில் 94 வயதான நடிகர் சிட்னி போய்ட்டியர் அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா நகரில் உள்ள அவரது வீட்டில் இயற்கை எய்தியதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனை கேட்ட அவரின் ரசிகர்கள் மிகுந்த மன வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here