பிரபல ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
பிரபல ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிரபல ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கேல் கே.வில்லியம்ஸ் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

மர்ம மரணம் :

The wire என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து மிகவும் பிரபலமடைந்தவர் நடிகர் மைக்கேல் வில்லியம்ஸ் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மேலும், இவர் ஒமர் லிட்டில் என்ற கதாபாத்திரம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவராக அடையாளம் காணப்பட்டார். இந்த நிலையில், இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளின் பகுதியில் தனியாக வசித்து வந்தார். தற்போது இவர் சார்ந்த பரபரப்பு செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பிரபல ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிரபல ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

அதாவது, திங்கட்கிழமை தனது வீட்டில் மர்மமான முறையில் மைக்கேல் கே.வில்லியம்ஸ் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து விசாரணையை நியூயார்க் நகர போலீசார் நடத்தி வருகின்றனர். இதில் தற்போது இவர் போதைப்பொருள் பழக்கத்தினால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதை நிரூபிக்கும் வகையில், இவரது வீட்டின் சமையலறை பகுதியில் இருந்து ஏராளமான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பிரபல ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிரபல ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இது மட்டுமில்லாமல், தனக்கு போதை பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பதாக அவர் ஒரு தனியார் நிகழ்ச்சியில் தெரிவித்து இருக்கிறார். இதனால் இவர் கொலை மற்றும் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என போலீசார் முடிவு செய்திருக்கிறார்கள். இருந்தாலும் அவரது மரணம் குறித்து நியூயார்க் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இவரது மர்ம மரணம் ஹாலிவுட் வட்டாரத்தில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here