முன்னாள் மனைவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த பிரபல நடிகர் – 116 கோடி அபராதம் வழங்க கோர்ட்டு உத்தரவு!!

0
முன்னாள் மனைவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த பிரபல நடிகர் - 116 கோடி அபராதம் வழங்க கோர்ட்டு உத்தரவு!!
முன்னாள் மனைவி மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்த பிரபல நடிகர் - 116 கோடி அபராதம் வழங்க கோர்ட்டு உத்தரவு!!

பிரபல ஹாலிவுட் நடிகர், ஜானி டெப் தனது முன்னாள் மனைவி ஆம்பர் ஹேர்ட் மீது தொடுத்த, மானநஷ்ட வழக்கில், மனைவி ஆம்பர்  116 கோடி அபராதம் வழங்குமாறு, நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 நீதிமன்றம் உத்தரவு :

ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜானி டெப். பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் என்ற ஹாலிவுட் படத்தில், ஜாக் ஸ்பேரோ என்ற கடற்கொள்ளையர் பாத்திரத்தில் நடித்து உலக அளவில் புகழ் பெற்ற இவர், 1983ல் அன்னி அல்லிசன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இவரை விவாகரத்து செய்து கடந்த, 2015ல் ஆம்பர் ஹேர்ட் என்பவரை 2 வதாக திருமணம் செய்தார். ஆனால், அவரையும் கடந்த 2017ல் விவாகரத்து செய்தார். இதையடுத்து, அவருக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மேலும், தனது முன்னாள் மனைவி, அவரது கட்டுரை வாயிலாக தன்னை இழிவு படுத்தி பேசியதாக அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் தற்போது, அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அபராதமாக 38 கோடியும், இழப்பீடாக 78 கோடியும் என மொத்தமாக 116 கோடி அபராதத்தை அவரது முன்னாள் கணவர் ஜானிக்கு, ஆம்பர் ஹேர்ட் வழங்க வேண்டும் என கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிமன்றத்தின், இந்த உத்தரவு ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here