தமிழகத்தில் அதிவேகமாக பரவும் வைரஸ் காய்ச்சலால் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்!!

0
தமிழகத்தில் அதிவேகமாக பரவும் வைரஸ் காய்ச்சலால் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் அதிவேகமாக பரவும் வைரஸ் காய்ச்சலால் பள்ளிகளுக்கு விடுமுறையா? அமைச்சர் விளக்கம்!!

தமிழகத்தில் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைவரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவதால் புதுச்சேரியை போல பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா? என்பதை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கியுள்ளார்.

வைரஸ் காய்ச்சல்

சமீப காலமாக நாடு முழுவதும் இன்ப்ளூயன்ஸா H3N2 வைரஸ் காய்ச்சல் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என சுகாதாரத்துறை எச்சரித்து இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் முகக்கவசம், சோசியல் டிஸ்டன்ஸ் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அறிவுறுத்தி வருகிறது. ஆனாலும் இதனின் தாக்கத்தால் பள்ளி குழந்தைகள் முதல் முதியோர்கள் வரை அனைத்து வயதினரும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு பள்ளிகளில் பயிலும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு நாளை (மார்ச் 16) முதல் 10 நாட்களுக்கு விடுமுறை அளித்துள்ளதாக புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முன்கூட்டியே தேர்வுகள் நடத்த திட்டமா?? வெளியான முக்கிய தகவல்!!!

இதையடுத்து தமிழகத்திலும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதற்கான சூழ்நிலை தற்போது இல்லை.” என திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். மேலும் பொதுமக்கள் இந்த வைரஸ் குறித்து எவ்வித பயமும் கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் பலரும் அமைச்சரின் பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here