
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் முடிவடைந்துள்ளதால் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்த தினங்களில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இருந்தாலும் ஒரு சில தனியார் பள்ளிகள் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்துவதாக திருப்பூரில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக பொதுத் தொழிலாளர் நல அமைப்பு பொதுச்செயலாளர் அ.சரவணன் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜூடம் புகார் மனு அளித்துள்ளார்.
ஏய்.., இனி தான் என் ஆட்டம் இருக்கு.., பழிதீர்க்கும் குணசேகரன்.., எதிர்நீச்சல் சீரியல் ட்விஸ்ட் !!!!
மேலும் அவர் கூறுகையில், “இது போன்ற தனியார் பள்ளிகளின் நடவடிக்கையால் மாணவர்கள் சுற்றுலா, விளையாட்டு என விடுமுறையை கொண்டாட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட பள்ளிகளில் கலெக்டர் நேரடியாக கள ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.