இந்தியாவில் புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதுபோன்ற தினங்களை வெளிநாடு வாழ் இந்தியர்களும் சிறப்பிக்கும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பெரும்பாலான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர்கள் தீபாவளி பண்டிகைகளை சிறப்பிக்கும் விதமாக விடுமுறை வழங்க வேண்டும் என நியூயார்க் நகர அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதேபோல் சீனாவில் புத்தாண்டு தினத்தில் சீனர்களுக்கு விடுமுறை வழங்க வேண்டும் எனவும் அந்நாட்டு அரசு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் நியூயார்க் மாகாண பேரவை தலைவர் கார்ல் ஹீஸ்டி முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிடுச்சே.., கெரியரை தொலைத்த நடிகை ரக்ஷிதா!!
அதாவது “நியூயார்க்கில் தீபாவளி மற்றும் சீன புத்தாண்டுக்கு விடுமுறை அளிப்பது அவசியம் தான். இது தொடர்பான ஆலோசனை மேற்கொண்டு நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் மசோதா நிறைவேற்றப்படும்.” என நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் தீபாவளிக்கு பொது விடுமுறை வழங்கியது குறிப்பிடத்தக்கது.