அடடே.., என்ன ஒரு தெய்வீக காதல்.., போட்டி முடிவில் பல நாள் தோழிக்கு Propose செய்த ஹாங்காங் வீரர்!!

0
அடடே.., என்ன ஒரு தெய்வீக  காதல்.., போட்டி  முடிவில் பல நாள் தோழிக்கு Propose செய்த ஹாங்காங் வீரர்!!
அடடே.., என்ன ஒரு தெய்வீக  காதல்.., போட்டி  முடிவில் பல நாள் தோழிக்கு Propose செய்த ஹாங்காங் வீரர்!!

ஆசிய கோப்பை தொடருக்கான 5 வது லீக் ஆட்டத்தில் தோல்வி அடைந்த ஹாங்காங் அணி வீரர் ஒருவர் போட்டி முடிந்ததும் மைதானத்தில் தனது தோழியிடம் காதலை வெளிப்படுத்தியது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

IND VS HK Asia Cup!

ஆசிய கோப்பை தொடர் துபாயில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றியை கைப்பற்றியது. மேலும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தொடர் வெற்றிகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் தோல்வி அடைந்த ஹாங்காங் அணி அடுத்ததாக இன்று பாகிஸ்தான் அணியை சந்திக்க உள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ஒருவேளை இந்த போட்டியில் ஹாங்காங் அணி தோல்வியடைந்தால் ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறும் நிலை ஏற்படும். இந்நிலையில் ஹாங்காங் அணியின் வீரரான கின்சித் ஷா இந்திய அணிக்கு எதிரான போட்டி முடிவடைந்த பிறகு மைதானத்தில் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். இவர் போட்டி முடிந்த பிறகு தனது பாக்கெட்டில் உள்ள மோதிரத்தை எடுத்து காதலி முன்னால் மண்டியிட்டு தனது காதலை கூறியுள்ளார்.

இதற்கு அவரது தோழி சில நொடிகள் யோசித்து பிறகு காதலை ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 22 பந்துகளில் 30 ரன்களுடன், அதில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஹாங்காங் அணிக்காக சர்வதேச டி20 தொடர்களில் 43 போட்டிகளில் விளையாடி 633 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here