சர்வதேச இந்திய அணியானது, ஆசிய கோப்பை தொடரின் தனது கடைசி லீக் போட்டியில் நேபாளம் அணியை எதிர்த்து நேற்று விளையாடியது. இந்த போட்டியில் நேபாளம் அணி 230 ரன்கள் குவித்திருந்த நிலையில், இந்திய அணி சேசிங் செய்ய களமிறங்கியது. இதில், தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 74* மற்றும் சுப்மன் கில் 67* அதிரடி விளையாடி அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர். இதில், ரோஹித் சர்மா 6 பவுண்டரி 5 சிக்ஸர் என அரைசதம் (74*) கடந்ததன் மூலம் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகி உள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றுள்ள இவர் ஒருநாள் வடிவில் 22 முறையும், சர்வதேச அளவில் 38 முறையும் இவ்விருதை வென்று சாதனைப் படைத்துள்ளார். மேலும், இந்திய அளவில், அதிக ஆட்ட நாயகன் விருதை வென்ற 3வது வீரர் என்ற பெருமையும் ரோஹித் சர்மா (38*) வென்றுள்ளார். இந்த பட்டியலில் முதல் இரு இடங்களில் சச்சின் (76) மற்றும் விராட் கோலி (63) உள்ளனர். மேலும், ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி சர்வதேச அளவில் 250 சிக்ஸர் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் தொடக்க வீரராக மட்டும் 158 இன்னிங்ஸ்களில் விளையாடி 28 சதங்கள் மற்றும் 36 அரை சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய கோப்பையில் மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் மோதல்…, வெளியான புள்ளிப் பட்டியல்!!