நடிகை கங்கனா ரணாவத் மீது தேச துரோக வழக்கு?? நீங்க சும்மா இருந்தாலும்..உங்க வாய் சும்மா இருக்காது போலயே!!

0

இந்திய திருநாட்டின் சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வலுக்கும் எதிர்ப்பு:

பாலிவுட் திரை உலகில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரணாவத். இவர் சமீபத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி என்ற படத்தில் நடித்து மிகவும் புகழடைந்தவராக மாறினார். அண்மையில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற இவர், அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் இந்திய திருநாட்டின் சுதந்திரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அவரது வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், காந்தியின் பிச்சை பாத்திரத்தில் கிடைத்த சுதந்திரம் உண்மையானது அல்ல என்றும், கடந்த 2014ம் ஆண்டு தான் உண்மையான சுதந்திரம் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இதனை அடுத்து, பல அரசியல் கட்டி தலைவர்கள் அவர் மீது தேச துரோக வழக்கு போட சொல்லி பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here