என்னது ஒரு கொத்து திராட்சையின் விலை 7 லட்சமா??? வெளியான சுவாரசிய தகவல்!!!

0

தற்போது உள்ள சூழ்நிலையில் பல பொருட்களின் விலைகள் அதிகரித்து தான்  உள்ளது. ஆனால் இதற்கெல்லாம் ஒரு படி மேலாக போய் ஜப்பான் நாட்டில் விளையும் ரூபி ரோமன் திராட்சை ஒரு கொத்து 7லட்சத்திற்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

பழங்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். மேலும் அவை உடலுக்கு நன்மைகளை தர கூடியவை. அவற்றில் உள்ள சத்துகளுக்கு வேறேதும் இணையாகாது. அதிலும் திராட்சை என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொள்ளை பிரியம் தான். இதில் ஜப்பான் நாட்டு மக்கள் மட்டும் விதி விலக்கா என்ன அவர்களுக்கும் அப்பிடி தான். அவர்கள் தங்களின் உற்ற உறவினர்களுக்கு  உயர்ந்த பொருட்களை பரிசளிக்க விருப்பினால் அவர்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது பழங்கள் தானாம்.

இந்நிலையில் அந்த நாட்டில் விளையும் ஒரு வகை திராட்சை பழத்தின் ஒரு கொத்து கடந்த 2019ஆம் ஆண்டு ஏழு லட்சத்திற்கும் அதிகமாக விற்கப்பட்டு உள்ளது. மேலும் இது உலகின் மிக அரிய வகை திராட்சை பழமாக உள்ளது. மேலும் இந்தப் பழம் அதிக சுவை மற்றும் குறைந்த அளவு அமில தன்மையுடன் இருப்பதால் தான் இந்த விலை என்று கூறுகின்றனர். உலகின் மிக விலை உயர்ந்த இந்த பழத்தின் பெயர் ரூபி ரோமன் திராட்சை ஆகும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here